தற்போதைய செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: 4 பேர்  சாவு; 8 பேர் காயம்

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரை அடுத்த தொழுதூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.அப்பகுதியில் சென்னையில் இருந்து கோவைக்கு தார் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.லாரியின் ஓட்டுநரும், உதவியாளரும் டயரை மாற்றிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ் லாரியின் பின்னால்

VASUDEVAN.K

திட்டக்குடி அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில், ஒரு பெண் உள்பட 4 பயணிகள் அதே இடத்திலேயே இறந்தனர். ஓட்டுநர், நடத்துனர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு அரசு பஸ் சென்றது. நெய்வேலியை அடுத்த சேப்பளாநத்தத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் அருள்ஜோதி (34) பஸ்சை ஓட்டினார்.உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியைச் சேர்ந்த தெய்வசிகாமணியின் மகன் விஸ்வநாதன் (36), நடத்துநர்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரை அடுத்த தொழுதூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.அப்பகுதியில் சென்னையில் இருந்து கோவைக்கு தார் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.லாரியின் ஓட்டுநரும், உதவியாளரும் டயரை மாற்றிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ் லாரியின் பின்னால் மோதியது. விபத்தில் அரசு பஸ்ஸின் இடதுபுறம் முற்றிலும் சேதமடைந்தது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் புழுதிபட்டியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் ராஜ்குமார் (23), சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த தங்கராசு (50), சமயபுரம் கோயில் பக்தர்கள் அணியும் வேட்டி, சட்டையுடன் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண், பச்சை கலரில் சல்வார் கமீஸ் உடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய 4 பேர் அதே இடத்திலேயே இறந்தனர்.

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்த எழுத்தூரைச் சேர்ந்த ஜெயராஜின் மகன் முருகன் (48), வையாபுரியின் மகன் ராமச்சந்திரன் (42), தாம்பரம் கடப்பேரி மெüலானா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (58), சென்னை மதன் (எ) மதன்குமார், நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த முருகேசனின் மனைவி மகேஸ்வரி (44), சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஆத்தங்குடியைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் செல்வராஜ் (47), பஸ் நடத்துநர் விசுவநாதன் (36), ஓட்டுநர் அருள்ஜோதி (34) ஆகியோர் காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இது குறித்து திட்டக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT